Muhammad Ali's Life Achievements 1942-2016 - A Special Analysis By. K.S.Thurai

உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் காஸியஸ் கிளே மரணம்.. சிறப்பு மலர்…

வியட்நாம் போருக்கு போக மறுத்து சிறை செல்லத்துணிந்த நாகரிக மனிதன்.. உலக சரித்திரத்தில் ஓர் உன்னத அத்தியாயமான உலக அதிபார குத்துச்சண்டை வீரன் காஸியஸ் கிளே என்ற இயற்பெயர் கொண்ட முகமது அலி சுகயீனம் காரணமாக தனது 74 வது வயதில் நேற்று 03.06.2016 மரணமடைந்தார்.

உலகளாவிய ரீதியில் 61 குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்று 56 போட்டிகளில் வெற்றி வாகை சூடியவர், மூன்று தடவைகள் குத்துச்சண்டைக்கான உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர்.

ஆடிய ஆட்டங்களில் 37 ஆட்டங்களை நொக்கவுட் முறையில் வெற்றி பெற்றவர், 1960ம் ஆண்டு ஒலிம்பிக் தோன்றிய கிறீஸ் நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர், 1964ம் ஆண்டு முதலாவது உலக சாம்பியன் பட்டத்தை வென்றது முதல் 1981 ஓய்வு பெறும்வரை குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கியவர்.

இவர் குத்துச்சண்டை வீரர் மட்டுமல்ல தனது சண்டைகளுக்கு எதிர் மாறாக மிகச்சிறந்த மனித நேயமுள்ளவராகவும், அரசியலை மாற்ற போராடியவராகவும், நிறவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தவராகவும், இஸ்லாத்தை போற்றியவராகவும் பல்வேறு புரட்சிகர முகங்கள் கொண்டவராகும். two

அமெரிக்காவின் தென்புலத்தே உள்ள லூஸ்வில்லே – கென்ரக்கி என்ற இடத்தில் 17 தை 1942ம் ஆண்டு பிறந்த இவருடைய இயற்பெயர் காஸியஸ் மேர்குளுஸ் கிளே யூனியர் என்பதாகும், 12 வயதிலேயே குத்துச்சண்டையை தனது அபிமான விளையாட்டாக கருதி பயிற்சி எடுக்கத் தொடங்கினார்.

மின்னல் வேகமான வீரர் என்று அக்காலத்தே வர்ணிக்கப்பட்டார், குத்துச் சண்டை என்பது கைகளால் ஆடும் ஆட்டமென எல்லோரும் நினைத்திருக்க வேகமான கால் ஆட்டமே அதன் வெற்றிக்கு அடிப்படை என்றவர்.. றப் பாடலை வேகமாக வாய்க்குள் முணு முணுத்தபடியே வேகமாக கால்களால் நடனமாடி எதிரிகளை மூன்றாம் நான்காம் சுற்றிலேயே அடித்து நொக் அவுட் ஆக்கிவிடும் அபார வீரர்; இவர்.

இவருடைய தாக்குதல் முறை பின்வாங்கும் முறையல்ல தொடர்ந்து முன்னேறுவதாகும், எதிரிக்கு முன்னேற வாய்ப்பின்றியே சமாரியான தாக்குதல்களை செய்வார்.. வேகம்.. வேகம்.. எதிரி விழுந்த பின்னரே அது நிற்கும்.

ஜோர்ஜ் பேர்மன் என்ற ஆட்டக்காரருடன் மோதும் போது அவருடைய நிழலே தான் என்றார்.. அவரைப்போலவே அசையும் வேகம்..

1964 மாசி 25ம் திகதி முதலாவதாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார், 1965 மே 25ம் திகதி இவருடன் மோதிய வீரர் சொனி லிஸ்ரன் நாலாவது ரவுண்டிலேயே தரையில் கிடந்தார், உலகம் அதிர்ச்சியடைந்தது. 1970 அக்டோபர் 26 முதலாவது புரொபெஷனல் ஆட்டத்தில் குத்துச்சண்டை வீரர் ஜெர்ரி குரேயை மூன்றாவது ரவுண்டில் நொக்கவுட் ஆக்கினார்.

1974 அக்டோபர் 30ம் திகதி ஜோர்ஜ் போமனை எட்டாவது ரவுண்டிலேயே நொக்கவுட் செய்து வென்றார்.. tre

இந்த வெற்றிகள் அவருடைய வாழ்வில் பெரும் சவாலை ஏற்படுத்தியது.. 1964 ம் ஆண்டு அவர் உலக சாம்பியனானபோது வியட்நாம் போருக்கு செல்ல வேண்டுமென அமெரிக்க அரசு அவரைப்பணித்தது. அமெரிக்க சட்டப்படி படைத்துறையில் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும், இல்லையேல் குற்றமாகும்.

ஏழை வியட்னாமியரை கொன்று புதைக்கும் போர்க்களத்திற்கு நான் ஒருபோதும் செல்லமாட்டேன், வேண்டுமானால் என்னை சிறையில் தள்ளுங்கள் என்றார், இதனால் மூன்று வருடங்கள் இவருடைய உலக சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது.

அதிகாரத்திற்கு அடிபணிந்து விலைபோகாத மனிதன் என்பதை வெளிப்படுத்தி உலக மக்களின் இதயத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்தார். அமெரிக்கரின் இனவாத, நிறவாதப் போக்குக்கு எதிராக 1965ம் ஆண்டு இஸ்லாத்திற்கு மதம் மாறி முகமட் அலி என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு நேஷன் ஒப் இஸ்லாம் என்ற அமைப்பையும் உருவாக்கினார்.

நிறவாதத்திற்கு எதிராக போர்க்குரல் கொடுத்தார், நீங்கள் என்னை நீக்ரோ என்று நிறத்துவேஷம் கொண்டு இகழாதவரை நான் உங்களுக்கு பிரச்சனையானவன் அல்ல என்று அமெரிக்க சமூகத்தை பார்த்து குரல் கொடுத்தார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சில தினங்களுக்கு முன்னரே நீக்ரோ என்ற சொல்லை பாவிக்கக் கூடாது என்று அரசியல் அமைப்பில் இருந்து நீக்கியமை கவனிக்கத்தக்கது, இது கிளேயின் போராட்டத்திற்குக் கிடைத்த இன்னொரு வெற்றியாகும். four

எல்லாவற்றையும் விட மேலாக சிறந்த கீழ்ப்படிவுள்ள மனிதனாக திகழ்ந்தார் வெள்ளையின மக்கள் இவரை நினைந்து நினைந்து போற்றுகிறார்கள்.. நான் பெரியவன், நான் வேகமானவன் என்று கூறியதைவிட ஆட்டங்களில் சத்தமிட்டது, பெருமை காட்டியது போன்ற சிறுபிள்ளைத்தனங்களுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு தான் ஒரு பண்புள்ள மனிதன் என்பதை நிலை நிறுத்தினார். ஆப்கானிஸ்தான் உட்பட உலகின் போர் நடக்கும் இடங்களுக்குச் சென்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமாக நின்று அவர்களின் நம்பிக்கை மொழியாக திகழ்ந்தார்.

காலச்சக்கரம் சுழன்றது, அமெரிக்க அரசு பணிந்தது 1996 அமெரிக்க அல்ரான்ராவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் பெருமையை இவருக்குக் கொடுத்து கௌரவித்தது.

இவருடைய 61 ஆட்டங்களில் ஐந்து தடவைகள் மட்டுமே தோல்வியைத் தழுவினார் 32 வது ஆட்டம் ஜோ பிரேசியருடன் நடந்தபோது தோல்வியடைந்தார், பின்னர் 43 வது ஆட்டம் கென் நோர்ற்றனுடன் நடந்தபோது தோல்வியடைந்தார், அடுத்து 58 வது ஆட்டம் லியோன் பிங்சிடம் தோற்றார், 60 வது ஆட்டம் லரிகோம்ஸ், 61 வது ஆட்டம் ரேவர் பாபிக்கிடம் தோற்றார் இவைகளே இவருடைய தோல்விப் பட்டியல்களாகும்.

1984ம் ஆண்டு பார்க்கிங்ஸ்ரன் நோயினால் பாதிக்கப்பட்டார், மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து உடல் இயக்கத்தை கெடுக்கும் ஒருவகை வாத நோய் இதுவாகும், அதுதவிர சிறு நீரகப் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு என்று பலவிதமான நோய்களுடன் 32 வருடங்களாக தொடர்ந்து நம்பிக்கையுடன் போராடினார், 03.06.2016 அன்று மூச்சு திணறல் காரணமாக இவ்வுலக வாழ்வை நீத்தார். five

குத்துச்சண்டைகளின் போது தலையில் வாங்கிய அடிகளே நரம்பு மண்டலத்தை பாதித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.. கறுப்பு நிற மனிதனாக ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் பிறந்து, தனது மக்களையும், ஒடுக்கப்பட்ட உலக மக்களையும் மறந்து சுய நலமாக வாழாமல், உண்மையை நேசித்து வாழ்ந்த இவருடைய வெள்ளை உள்ளம் உலக மக்களால் வணங்கப்படுகிறது.

அன்பு, கீழ்ப்படிவு, கருணை, நேர்மை, சுயநலமின்மை, மன்னிப்பு கேட்டல் போன்ற மாபெரும் பழக்கங்களால் தன்னை எதிர்த்து மோதிய குத்துச்சண்டை வீரர்களை மட்டுமல்ல உலகத்தையே வென்று விடை பெற்றுள்ளார்.

காஸியஸ் கிளேயின் வாழ்வு உலக வரலாற்றின் பொன்னெழுத்துக்கள்… அலைகளுக்காக..Written By: கி.செ.துரை 04.06.20160 kommentarer: